உலகில் ஆத்மாக்கள் உள்ளதாக நம்பப்பபடும் இடம்! அமானுஷ்ய ஆர்வலர்கள் சொல்வது உண்மையா?
ஆத்மாக்கள் மீது சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலருக்கு ஆத்மாக்கள் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கலாம்.இது அவரது எண்ணங்களை பொருத்து அமைகிறது. ஆனால் காலம்காலமாக பேய்கள் இருப்பதாக கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன.
இது எந்தளவிற்கு உண்மை அப்படி இருந்தால் அது செய்வது என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. சில கதைகளில் தீவுகளில்தான் பேய்கள் அதிகம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது வெறும் நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அந்த வகையில் ஆத்மாக்கள் இருப்பதாக நம்பப்படும் இடம் எங்கே இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இத்தாலியின் போவெக்லியா
இது பேய்களின் கோட்டை என்று, அமானுஷ்ய ஆர்வலர்களால் வர்ணிக்கப்படுகிறது. வெனிஸ் கடற்கரையில் உள்ள இந்த சிறிய தீவு, உலகின் மிகவும் பேய்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
இது பார்ப்பதற்கு மக்களை ஈர்க்கும் அமைப்புடன் காணப்படுகின்றது. இந்த தீவில் ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் 18 ஆம் நூற்றாண்டில் நடந்ததாம். இதன் பின்னர் இங்கு ஒரு மனநல மருத்துவமனை அமைக்கப்பட்டதாவும், அதில் கொடூரமான மருத்துவர் இடம் பெற்று அவர் பலரை கொன்று குவித்ததாகவும் கூறப்படுகிறது.
இத நடந்ததற்கான காரணம் இன்றும் அறியப்படவில்லை. இப்படி நடந்துகொண்ட மருத்தவர் அந்த மருத்துவமனையின் மணி கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் உள்ளன.
மேலும் இந்த தீவில் காணப்படும் ஏராளமான பழைய கட்டிடங்கள், இங்கு பேய்கள் அதிகம் உள்ளன என்ற தகவலுக்கு உண்மையாக இருக்கிறது. இங்கு யாரும் வருகை தராமல் இல்லை.
இங்கு பல பார்வையாளர்களும் பேய் வேட்டையர்களும் தீவை ஆராயும்போது விசித்திரமான சப்தங்களை கேட்பதாகவும், நிழல் உருவங்களைப் பார்ப்பதாகவும், விவரிக்க முடியாத குளிர்ச்சியான இடங்களை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த இடம் முற்று முழுதாக வினோதமான அமைதி மற்றும் சோகமான கடந்த காலம் இதை உலகின் மிகவும் பேய்கள் நிறைந்த இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.