உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அநுர விடுத்துள்ள அதிரடி உத்தரவு
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) வழங்கியுள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அனுமதி பத்திரங்கள் ரத்து
தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Anurakumara Dissanayake) இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.