;
Athirady Tamil News

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்நாள் முழுவதும், மாதாந்தம் 45 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாக பெறுவர்.

எனினும் அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டிய போதிலும் முன்கூட்டியே அது கலைக்கப்பட்டதால் குறித்த உறுப்பினர்கள் அந்த சிறப்புரிமையை இழப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பதவி காலம்
2 முறை நாடாளுமன்ற பதவி காலத்தை நிறைவு செய்யும் உறுப்பினர்கள் 55 ஆயிரம் ரூபா ஓய்வூதியமாக வழங்கப்படும்.

9வது நாடாளுமன்றம் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று தொடங்கியது. அதற்கமைய, நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் முடிவடையவிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்
அந்தச் சம்பளத்துடன், நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஒரு நாளுக்கு வருகை சம்பளம் 2500 ரூபாயும், நாடாளுமன்றம் கூடாத நாட்களில் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு 2500 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 54 ஆயிரத்து 385 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.