செந்தில் பாலாஜிக்கு ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு – தொண்டர்கள் கொண்டாட்டம்!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பலமுறை ஜாமின் கோரி அவர் அளித்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், ஒராண்டுக்கும் மேலாக சிறையிலேயே இருந்து வந்தார்.
தொண்டர்கள் உற்சாகம்
இதற்கிடையில், பலமுறை உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் சுமார் 6 மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில்,
இன்று(செப்.26) உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி நாளை வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவருக்கு ஜாமின் கிடைத்ததையடுத்து கரூர் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.