மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!
புலம்பெயர்ந்தோருக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது.
சுவிஸ் நாடாளுமன்றம், அகதிகளுக்கெதிரான பிரேரணை ஒன்றை வாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
அகதிகளுக்கெதிராக பிரேரணை
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டும், பலவேறு காரணங்களால் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல இயலாமல், சுவிட்சர்லாந்திலேயே தங்கியிருப்போர், தற்காலிகமாக சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
ஆக, இந்த தற்காலிகமாக சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவரக்கூடாது என்று கூறும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக செயல்படுவதை வழக்கமாகவே கொண்டுள்ள சுவிஸ் மக்கள் கட்சிதான் இந்த பிரேரணையையும் முன்வைத்தது.
நாடாளுமன்றத்தின் கீழவையில், அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 105 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் கிடைக்க, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவரக்கூடாது என்று கூறும் பிரேரணை வெற்றி பெற்றுள்ளது.
என்றாலும், அடுத்து நாடாளுமன்றத்தின் மேலவையில் இந்த பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது.