தெற்கு லண்டனை உலுக்கிய விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்… ஒப்புக்கொண்ட நபர்
இந்த ஆண்டு தொடக்கத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர், இதற்கு முன்பு 1998ல் டாக்ஸி சாரதி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நகரின் பல பகுதிகளில்
தெற்கு லண்டனில் 38 வயதான சாரா மேஹூ என்பவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் நகரின் பல பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது 45 வயதான Steven Sansom என்பவர் நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் திகதி தெற்கு லண்டனில் பல பகுதிகளில் இருந்து பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. மட்டுமின்றி, வழக்கை குழப்பும் வகையில் சாராவின் உடலை துண்டு துண்டாக வெட்டி நகரின் பல பகுதிகளில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவயிடத்திலேயே
இந்த நிலையில், அவர் மீது மேலும் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சன்சோம் இதற்கு முன்பு 1999ல் டாக்ஸி சாரதி ஒருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றவர்.
1998ல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் Terrence Boyle என்ற டாக்ஸி சாரதியை கத்தியால் தாக்கிவிட்டு 25 பவுண்டுகளை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையான Terrence Boyle சம்பவயிடத்திலேயே மரணமடைந்தார்.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்ட சன்சோம் 2019ல் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.