அணுகுண்டு வீசப்படுவது எப்போது? புதிய விதியை வெளியிட்டார் புடின்
ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்று முன்னர் கூறியிருந்தார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
ஆனால், இப்போது, அணுகுண்டு வீசப்படுவது எப்போது என்பது தொடர்பில் புதிய விதி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அணுகுண்டு வீசப்படுவது எப்போது? புதிய விதி
ரஷ்யாவை நோக்கி பெருமளவில் ஏவுகணைகளும் ட்ரோன்களும் வீசப்படுவதை ரஷ்யா கண்டுபிடிக்கும் பட்சத்தில், அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் என்று கூறியுள்ளார் புடின்.
அத்துடன், அணு ஆயுதம் வைத்திராத நாடு ஒன்று, அணு ஆயுதம் வைத்துள்ள நாடு ஒன்றின் ஆதரவுடன் ரஷ்யாவுக்கெதிராக மோதுமானால், அது ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான கூட்டு தாக்குதலாகவே கருதப்படும் என்று கூறியுள்ளார் அவர்.