3வேலையும் சமைப்பது கிடையாது.. இந்தியாவில் உள்ள வினோத கிராமம் – ஏன் தெரியுமா..?
குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது கிடையாது.
இந்தியா
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், வீடுகளில் மூன்று வேளை சமைப்பது என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதிலும் ஸ்விகி, ஜொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் வந்தப் பிறகு வீடுகளில் சமைப்பது கணிசமாகக் குறைந்து வருகிறது.
இப்படி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது கிடையாது.இதன் பின்னணியில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். குஜராத் மாநிலம், மஹிசனா மாவட்டத்தில் சந்தன்கி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
ஆனால் 500க்கும் குறைவான மக்களே உள்ளனர். இங்கு வயது முதிர்ந்தவர்கள் தான் அதிக அளவில் உள்ளனர். இந்த கிராமத்தில் ஒருவரது வீட்டில் கூட சமையல் செய்ய மாட்டார்கள். இதற்குக் காரணம் பாரம்பரிய பிணைப்பு என்று கூறப்படுகிறது.
முன்பு சந்தன்கி கிராமத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த நிலையில் இளைஞர்கள் பெரும்பாலும் படித்து முடித்தப் பிறகு, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்குச் சென்றுவிட்ட பெரும்பாலும் முதியோர்கள் தான் இருக்கிறார்கள்.
சமைப்பது கிடையாது
அந்த ஊருக்கு பொதுவாக ஒரு சமூக சமையல் கூடம் உள்ளது. ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் தினசரி அங்குதான் சமையல் செய்யப்படுகிறது. சமையல் செய்வதற்காக 11 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒருவர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நபருக்கு மாதம் ரூ.2,000 செலுத்தப்படும் நிலையில் ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய குஜராத்தி வகை உணவுகளைச் சமைத்துக் கொடுத்துவிடுவார். இவை ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் எண்ணத்திலும் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் சந்தன்கி கிராமத்தில் கிராமத்தில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது கிடையாதாம்.