வவுனியாவில் கோர விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பலி
வவுனியாவில் (vavuniya) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது வவுனியா – பூவரசங்குளம், குருக்கலூர் பகுதியில் இன்று (27) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் எனும் 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி முற்றிலும் எரிந்துள்ளது.
குறித்த இடத்தில் மின்கம்பி அறுந்து நிலையில் காணப்படுவதனால் மின்கம்பி முன்பே அறுந்து விழுந்திருந்ததா அல்லது விபத்தால் விழுந்ததால் மின்சாரம் தாக்கியதா என விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.