இளவரசர்கள் வில்லியம் ஹரியைப்போலவே பிரிய இருக்கும் வில்லியமுடைய பிள்ளைகள்: ராஜ குடும்ப விதி
இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜும் சார்லட்டும் பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் வந்து நின்றால், மக்கள் அப்படி ஆரவாரிப்பார்கள்.
அத்துடன், அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல பிணைப்பும் நிலவுவதை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், அடுத்த ஆண்டிலிருந்து அவர்கள் இருவரையும் பிரிக்க இருக்கிறது, ராஜ குடும்ப விதி ஒன்று!
இளவரசர்கள் வில்லியம் ஹரியை பிரித்த விதி
அதாவது, ராஜ குடும்பத்தில் ஒரு விதி உள்ளது. அது என்னவென்றால், 12 வயது ஆனதும், ராஜ குடும்ப சகோதரர்கள் இணைந்து பயணிக்க முடியாது.
இளவரசர்கள் இருவர் சேர்ந்து பயணிக்கும்போது, ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது, அடுத்து நாட்டை ஆள வாரிசு ஒருவராவது இருக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு விதி உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இளவரசர் வில்லியமுக்கு 12 வயதானதும், அவரும் ஹரியும் சேர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக, சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவரது பைலட்டாக இருந்த Graham Laurie என்பவர் தெரிவிக்கிறார்.
பிரிய இருக்கும் வில்லியமுடைய பிள்ளைகள்
ஆக, அதே ராஜ குடும்ப விதியின்படி, குட்டி இளவரசர்கள் ஜார்ஜும் சார்லட்டும் பிரிய இருக்கிறார்கள்.
காரணம், அடுத்த ஆண்டு குட்டி இளவரசர் ஜார்ஜ் 12 வயதை எட்ட இருக்கிறார். ஆகவே, இவ்வளவு நாட்கள் சேர்ந்தே பயணித்த ஜார்ஜும் சார்லட்டும் அடுத்த ஆண்டு முதல் சேர்ந்து பயணிக்க முடியாது.