;
Athirady Tamil News

துப்பாக்கி கலாச்சாரத்திற்கு செக் வைத்த ஜோ பைடன்., புதிய சட்டத்தில் கையெழுத்து

0

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மதவெறியர்கள் உருவாக்கிய பயங்கரமான குழப்பத்தால் அமெரிக்கா நடுங்குகிறது.

எப்போதும் ஏதாவது ஒரு இடத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. இந்த சம்பவங்களில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். குழந்தைகள் கூட இந்த கலாச்சாரத்திற்கு இரையாகி வருகின்றனர்.

இந்த சூழலில்தான் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளார்.

இதற்காக, வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் புதிய சட்டம் (துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம்) கொண்டு வரப்பட்டது.

இதன்மூலம், 3டி அச்சிடப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட துப்பாக்கிகளால் (3D printed and converted firearms) அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடவும், பள்ளிகளில் active shooter drills பயிற்சிகளை மேம்படுத்தவும் ஒரு புதிய நிர்வாக உத்தரவை வியாழக்கிழமை வெளியிட்டார்.

வெள்ளை மாளிகை நிகழ்வில் பைடன் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, இயந்திர துப்பாக்கி மாற்று சாதனங்களால் ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கு ஒரு புதிய கூட்டாட்சி பணிக்குழுவை அமைக்கிறது.

இதனை ஜனாதிபதியே வெளிப்படுத்தியுள்ளார். துப்பாக்கி கலாச்சாரம் குறித்து கவலை தெரிவித்து எக்ஸ் தளத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டது.

அமெரிக்காவில் நோய்கள் மற்றும் விபத்துகளால் குழந்தைகள் இறப்பதை விட, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று அவர் கவலை தெரிவித்தார்.

இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்டு வருவதாக அவர் கூறினார். துப்பாக்கி வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதாக பைடன் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.