;
Athirady Tamil News

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்டைக்காய்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

0

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்டைக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வெண்டைக்காய்
ஆரோக்கியமான காய்கறிகள் ஒன்றான வெண்டைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. ரெிமானத்திற்கு உதவும் இவை எடை இழப்பிற்கும் பெரிதும் உதவுகின்றது.

வைட்டமின் சி, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை வெண்டைக்காய் கொண்டுள்ளது.

மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுத்துவதுடன், சில தருணங்களில் விஷமாகவும் மாறும்.

வெண்டைக்காய் லெக்டின் என்ற புரதத்தைக் கொண்டுள்ள நிலையில், இவை சிலருக்கு அலர்ஜியையும், இதிலுள்ள அதிக நார்ச்சத்து சிலருக்கு வாயு உற்பத்தி செய்து வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

யார் சாப்பிடக்கூடாது?
அலர்ஜி ஏற்படுபவர்கள் வெண்டைக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது சாப்பிட்ட பின்பு அரிப்பு, தடிப்பு, கொப்புளங்கள், மூச்சு திணறல், வயிற்று வலி பிரச்சனையை ஏற்படுத்தும்.

உங்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்கனவே இருந்தால் வெண்டைக்காயை தவிர்க்கவும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, எரிச்சலூட்டும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டும் இன்னும் நிலைமை மோசமாகும்.

நீரிழிவு நோயாளிகள் அதற்கான மாத்திரை எடுத்துக் கொண்டால் மருத்துவரின் ஆலோசனையின் படி வெண்டைக்காயை எடுத்துக் கொள்ளவும். ஏனெனில் வெண்டைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கின்றது.

பாலூட்டும் தாய் மார்கள் கர்ப்பிணிகளும் வெண்டைக்காய் சாப்பிடும் முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லதாகும்.

இதே போன்று சிறுநீரக பிரச்சனையாலும், சளி பிரச்சனையாலும் அவதிப்படுபவர்கள் வெண்டைக்காயை சாப்பிடக்கூடாது. இதில் உள்ள கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களின் கஷ்டத்தை அதிகரிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.