இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துங்கள்! ஐ.நாவில் பாலஸ்தீன ஜனாதிபதி முழக்கம்
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துங்கள்
வெஸ்ட் பேங்க் மற்றும் காசாவில் ஏற்பட்டும் வரும் பேரழிவை நிறுத்துவதற்கு முதலில் இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆயுதங்களை உலக நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வியாழக்கிழமை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்(Mahmud Abbas) ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஹமாஸ் கட்டுப்பாடு சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, காசாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 41,534-ஐ கடந்துள்ள போதிலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கான இராஜதந்திர பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது என்று ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த குற்றங்களை உடனடியாக நிறுத்துங்கள், பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை நிறுத்துங்கள், இனப்படுகொலையை நிறுத்துங்கள், இஸ்ரேலுக்கான ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துங்கள், இன்னும் இந்த பைத்தியக்காரத்தனத்தை தொடர அனுமதிக்க முடியாது என்று பேசினார்.
அத்துடன் காசாவில், வெஸ்ட் பேங்கில் உள்ள மக்களுக்கு நடைபெறும் அநியாயங்களுக்கு உல நாடுகள் அனைத்தும் தான் பொறுப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உரையாற்றினார்.