உக்ரைனில் போர் ஓநாய்களை களமிறக்கும் புடின்: kamikaze ட்ரோன்களால் நடுங்கும் ரஷ்யா
உக்ரைன் போர் முனையில் போருக்கு என தயார் படுத்தப்பட்டுள்ள ஓநாய்களை களமிறக்கியுள்ளது ரஷ்யா.
அடையாளம் கண்டு
உண்மையில் இந்த ஓநாய்களால் kamikaze ட்ரோன்களை நிமிடங்களுக்கு முன்னரே அடையாளம் கண்டு எச்சரிக்க முடியும் என கூறப்படுகிறது.
மோப்ப சக்தி அதிகம் கொண்ட, ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கும் குணம் கொண்டவை இந்த ஓநாய்கள் என ரஷ்ய ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
தப்பிக்க வாய்ப்பாக இருக்கும்
பயிற்சி அளிக்கப்பட்ட இரண்டு ஓநாய்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளதாகவும், பலன் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், மேலதிக எண்ணிக்கையில் ஓநாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக ரஷ்ய வீரர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், ஆபத்தை உணர்ந்து முன்கூட்டியே எச்சரிக்கும் என்பதால், வீரர்களுக்கு தப்பிக்க வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.