அரசியலமைப்பு சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட நிமால் சிறிபால டி சில்வா
முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை(Nimal Siripala de Silva) அரசியலமைப்பு சபையின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anurakumara dissanayake)நீக்கியுள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக சபாநாயகர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு பதிலாக அமைச்சர் விஜித ஹேரத் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிமல் சிறிபால டி சில்வாவுக்கு பதிலாக அரசியலமைப்பு சபையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த நாடாளுமன்றம் கூடும் வரை சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை செயற்பட வேண்டும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
தற்போதைய நிலவரப்படி, அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தொடர்ந்தும் செயற்படுகிறார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(Dr. Harini Amarasuriya), அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்(Kabir Hashim), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(sagara kariyawasam) மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான கலாநிதி பிரதாப் ராமானுஜம்(Dr. Pratap Ramanujam), கலாநிதி அனுலா விஜேசுந்தர(Dr. Anula Wijesundara) மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன(Dr. Dinesha Samararatne) ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.