ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை… உண்மையை உடைத்த ஜெலென்ஸ்கி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக பேசியுள்ளார்.
உண்மையில் என்ன நடந்தது
ரஷ்ய – உக்ரைன் போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை குறித்த பேச்சுவார்த்தை முடிவு செய்யும் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தமக்கு சிறப்பான உறவு இருப்பதாக ஜெலென்ஸ்கி அருகே நின்றுகொண்டு ஊடகங்களிடம் ட்ரம்ப் பெருமையடித்துக்கொண்டார்.
ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி ஆகியோர் நேற்று நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவரில் சந்தித்து, போர் தொடர்பில் விவாதித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து ஜெலென்ஸ்கி வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதில், தங்கல் சந்திப்பின் போது ட்ரம்ப் அதிக கேள்விகள் கேட்டு பதில் தெரிந்து கொண்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுக்க காரணம் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்?
அமெரிக்காவின் ஆதரவு எந்த அளவுக்கு உதவியாக உள்ளது? உள்ளிட்ட கேள்விகளை ட்ர்மப் முன்வைத்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், தாம் உக்ரைன் ஆதரவாளர் என்றும் உக்ரைன் பக்கம் இருப்பேன் என்று தெரிவித்ததாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல மாதங்களாக ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்ததுடன், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதையும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 2019 முதல் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் சந்திப்பு நடக்கவில்லை.
போர் முடிவுக்கு வந்திருக்கும்
ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தந்து ஆதரவை திரட்டி வந்துள்ளார் ஜெலென்ஸ்கி. தற்போது ட்ரம்ப் முதல்முறையாக உக்ரைன் வெல்ல வேண்டும் என ஜெலென்ஸ்கியிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டுவர தம்மால் மட்டுமே முடியும் என ட்ரம்ப் கூறி வந்துள்ளார். மட்டுமின்றி, ஜனவரியில் தாம் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரும் முன்னர் ரஷ்ய போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
போரை முடிவுக்கு கொண்டுவராமல் அமெரிக்கா பெருந்தொகையை செலவிடுவதாக கூறி ஜோ பைடனையும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.