;
Athirady Tamil News

தாமதிக்க வேண்டாம்… வெளியேறுங்கள்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகம் அவசர அறிவிப்பு

0

லெபனானில் இன்னமும் தங்கியிருக்கும் மக்கள் தாமதிக்க வேண்டாம் உடனையே வெளியேற வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரகம் அறிவித்துள்ளது.

அவசர உத்தரவு
லெபனானில் ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. லெபனான் மொத்தம் துக்கமனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் – லெபனான் போர் இறுகி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி தங்கள் சேவைகளை ரத்து செய்துவரும் நிலையில், லெபனானில் இருந்து இனி வெளியேறுவது கடினமான சூழலாக மாறும்.

இந்த நிலையில், பிரித்தானிய குடிமக்கள் வெளியேறும் பொருட்டு கூடுதலாக விமான சேவைகளை ஒருங்கிணைத்து வருகிறது பிரித்தானிய அரசாங்கம். அத்துடன், இன்னமும் வெளியேறாமல் தங்கியிருக்கும் குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பிரித்தானிய அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பிரித்தானிய பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பல மாதங்களாக உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எச்சரித்து வருகின்றன. ஆனால் சமீபத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, நிலைமை மோசமடைந்துள்ளது.

இதனையடுத்து, லெபனானில் உள்ள பிரித்தானியர்கள் உடனடியாக வெளியேற பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வணிக ரீதியாக சில நிறுவனங்கள் விமான சேவையை முன்னெடுத்து வருகிறது. மேலும், பிரித்தானிய வெளிவிவகாரத்துறையும் பிரித்தானிய மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ளது.

பிரித்தானிய மக்கள் வெளியேற
அத்துடன் லெபனானில் தற்போது எஞ்சியிருக்கும் பிரித்தானியர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். தூதரக அதிகாரிகளும் அவசர குழு ஒன்றை அமைத்து பிரித்தானிய குடிமக்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளது.

உண்மையில், லெபனானில் இருந்து பிரித்தானிய மக்கள் வெளியேற வேண்டும் என்ற வலியுறுத்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே அமுலில் உள்ளது. காஸா தாக்குதலை அடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் மோதல் போக்கை முன்னெடுத்திருந்தது.

தற்போது நிலைமை மிக மோசமடைந்துள்ளது என்றும், ஒரு சிறு எச்சரிக்கைக்கான கால அவகாசமே இனி இருக்கும் என்றும் அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பல விமான சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளை லெபனானில் இருந்தும், லெபனானுக்கும் ரத்து செய்துள்ளனர்.

மிக குறைவான எண்ணிக்கையில் விமானங்கள் செயல்பட்டு வருவதால் டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆனால் பெய்ரூட்டில் இருந்து அனைத்து பிரித்தானியர்களும் வெளியேறும் எண்ணத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.