இஸ்ரேலின் அடுத்த கட்ட புதிய தாக்குதல்: இடம்பெயர்ந்த 1 மில்லியன் லெபனான் மக்கள்
லெபனானின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழி தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலின் புதிய தாக்குதல்
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இருப்புகள குறிவைத்து டஜன் கணக்கான தாக்குதலை கடந்த 12 மணி நேரத்தில் அரங்கேற்றி இருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தாக்குதலானது, நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டு இருப்பதுடன் 195 பேர் படுகாயமடைந்து இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்த நிலையை தொடர்ந்து அரங்கேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கூடுதலாக 11 பேர் கொல்லப்பட்டதுடன், 108 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியேறும் லெபனான் மக்கள்
லெபனான் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 1000 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், 6000 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகளின் தொடர் தாக்குதலால் கிட்டத்தட்ட 1 மில்லியன் லெபனான் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெள்ளிக்கிழமை முதல் இடம்பெயர்ந்து இருப்பதாக லெபனான் அமைச்சர் நாசர் யாசின் தகவல் தெரிவித்துள்ளார்.