புலம்பெயர்வை கட்டுப்படுத்தும் பிரித்தானியா., வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை குறைக்க நடவடிக்கை
பிரித்தானிய அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் திறனை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
நாட்டில் அதிகரித்துள்ள புலம்பெயர்வு நிலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் (Home Office) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள புலம்பெயர்தல் ஆலோசனை குழு (Migration Advisory Committee-MAC) முக்கியத் துறைகளின் திறனின்மைகளை மதிப்பீடு செய்யும் மற்றும் அமைச்சர்களுக்கு சிபாரிசு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீசா ஸ்பான்சர்ஷிப்களின் ஆவணங்களைச் சோதிக்கும் பணி தீவிரமாக நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களை துன்புறுத்தும் நிறுவனங்களின் அனுமதிகள் இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும்.
புலம்பெயர்வைப் பொறுத்தவரை, ஏற்கனவே எடுத்த மாற்றங்கள் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது ஆவலாக இருப்பதை குறைத்து, நாட்டின் திறன் குறைபாடுகளை எதிர்கொள்ள இது ஒருங்கிணைந்த முயற்சியாக அமைகின்றது.
இது தொடர்பான முழுமையான ஆய்வு மற்றும் அறிக்கையை 2025 மே மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மைக்ரேஷன் ஆலோசனை குழுவிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.