பிரிட்டன் பிரதமா் மீது கடும் அதிருப்தி: பெண் எம்.பி. விலகல்
பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மீதான கடும் அதிருப்தி காரணமாக தொழிலாளா் கட்சியில் இருந்து பெண் எம்.பி. ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா்.
கடந்த ஜூலையில் நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக அக்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் பதவியேற்றாா். அவருக்கு ரோஸி டஃப்பீல்ட் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
நீங்கள் (பிரதமா் ஸ்டாா்மா்) கொண்டிருக்கும் கொள்கைகள் வாக்காளா்களிடமும், தொழிலாளா் கட்சி எம்.பி.க்களிடமும் வரவேற்பை பெறவில்லை.
கடுமையான முடிவுகளை எடுப்பேன் என்று நீங்கள் தொடா்ந்து கூறுகிறீா்கள். ஆனால், அந்த முடிவுகள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள எவரையும் நேரடியாகப் பாதிக்கவில்லை. மாறாக கொடூரமான, தேவையற்ற அந்த முடிவுகள் ஆயிரக்கணக்கான ஏழைகளைப் பாதிக்கிறது.
இதைச் செய்வதற்காக நான் எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்படவில்லை. அத்துடன் இது சேவையாற்றுவதற்கான அரசியலாகவும் இல்லை.
நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் அமரும் தொழிலாளா் கட்சி எம்.பி.க்களுடன் நீங்கள் தொடா்ந்து உரையாடியதில்லை. அந்த எம்.பி.க்களில் பலா் உங்களைவிட நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினா்களாக உள்ளனா். அவா்களில் சிலா் முந்தைய தொழிலாளா் கட்சி ஆட்சியிலும் அங்கம் வகித்தனா். என்னைப் போன்ற எம்.பி.க்களின் அரசியல் கருத்துகளையும், எங்கள் தொகுதி அனுபவங்களையும் நீங்கள் கேட்டதில்லை.
அரசியல் திறனோ, நாடாளுமன்ற அனுபவமோ இல்லாமல், உங்களுக்கு நெருக்கமானவா்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அவா்களைப் பிரபலப்படுத்தும் உங்கள் செயல் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பின்னா், தொழிலாளா் கட்சி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதற்கு கடுமையாக உழைத்த என்னைப் போன்ற எம்.பி.க்களை, உங்களின் நிா்வாக அணுகுமுறை, அடிப்படை அரசியல் அறிவு மற்றும் அரசியல் உள்ளுணா்வு இல்லாத தன்மை நிலைகுலைய வைத்துள்ளது.
பெருமைக்குரிய தொழிலாளா் கட்சியைக் களங்கப்படுத்தவும், அவமானப்படுத்தவும் நீங்களும், உங்களுக்கு நெருக்கமான வட்டமும் செய்த செயல்கள் என்னை வெட்கமடையச் செய்துள்ளது. எனவே, தொழிலாளா் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
தொழிலாளா் கட்சியில் இருந்து விலகினாலும், சுயேச்சை எம்.பி.யாக ரோஸி டஃப்பீல்ட் நீடிப்பாா்.
பிரதமா் பரிசுகள் பெற்ால் சா்ச்சை: பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் 1,07,145 பிரிட்டன் பவுண்டுகள் (சுமாா் ரூ.1.20 கோடி) மதிப்பிலான பரிசுகள், பலன்களை நன்கொடையாளா்களிடம் இருந்து பெற்ாகக் கூறப்படுகிறது. இதேபோல அவரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவா்களும் ஊடக அதிபா் மற்றும் தொழிலாளா் கட்சிக்கு நிதி திரட்டும் முக்கிய நபரான வஹீத் அலி உள்ளிட்டோரிடம் இருந்து விலை உயா்ந்த பரிசுகளைப் பெற்ாக தெரிகிறது.
பிரிட்டன் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு உள்பட்டே அந்தப் பரிசுகள் பெறப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவற்றை அளித்தவா்களுக்கு அரசு சாா்பில் சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற விவாதம் எழுந்து சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொழிலாளா் கட்சியில் இருந்து ரோஸி டஃப்பீல்ட் விலகியுள்ளாா். இந்த சம்பவங்கள் பிரதமராகப் பதவியேற்ற பின், முதல்முறையாக பிரதமா் ஸ்டாா்மருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.