“அதிபர் பைடனின் இல்லத்தில் கிருஷ்ணர்; விநாயகர் சிலைகள்” – மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் மோடி 2014ம் ஆண்டு முதல்முறையாக பதவி ஏற்றபிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் இந்திய மக்களிடம் வானொலி வாயிலாக பேசிவருகிறார்.
அந்தவகையில், செப்டம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று (29ம் தேதி) மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இந்தியாவில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு சாதனையாளரை அடையாளப்படுத்துவார். இது இந்நிகழ்ச்சியின் சிறப்பாக கருதப்பட்டுவருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் கூடுதலாக ஒரு சிறப்பு நடந்தது. மனதின் குரல் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.
அந்தவகையில் இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நேற்றைய மன்கி பாத் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமானது. நிகழ்ச்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மக்கள் தங்கள் உள்ளூர் மொழிகளில் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்டனர் என்று கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது.
மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிகக் உதவும். மன் கி பாத் நிகழ்ச்சியின் செயல்முறை எனக்கு கோயிலுக்கு சென்று கடவுளை பார்ப்பது போன்றது. சமூக உணர்வோடு சமுதாயத்தில் ஆற்றும் பணிகள் மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகின்றன.
புதுச்சேரி கடற்கரையில் தூய்மை குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. மாஹே நகராட்சியை சேர்ந்த ரம்யா என்பவரின் குழுவினர் கடற்கரையை தூய்மைப்படுத்துகின்றனர். மதுரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற ஆசிரியை தனது வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார். அவரது தந்தையை பாம்பு கடித்து போது மூலிகைச் செடிகளை பயன்படுத்தி உயிரை காப்பாற்ற முடிந்தது. ரம்யா, சுபஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டுகள்.
அமெரிக்க பயணத்தின் போது, அதிபர் பைடனின் இல்லத்தில் இருந்த பழமையான கலைப்பொருட்களில் கிருஷ்ணர், விநாயகர், புத்தர் சிலைகளும் இருந்தது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக கொண்ட செல்லப்பட்ட டெரகோட்டா, கற்கள், தந்தம், மரம், காப்பர், வெண்கலத்தால் செய்யப்பட்ட நமது கலைப்பொருட்களை திரும்ப வழங்கியுள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று இந்தியா உற்பத்தி சக்தியாக மாறிவிட்டது. திருவிழாவின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்” என்று பேசினார்.