முப்படையினருக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறித்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு
விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்ட முப்படையினருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதிவரை விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு, முப்படை தளபதிகளுக்கு எழுதிய கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் கடமை
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பிரமுகர்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்ட முப்படையினரும் 2024 செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு பின்னர் உயரதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடமாட்டார்கள் என பாதுகாப்பு அமைச்சு முப்படைகளின் தளபதிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது.
அவ்வாறு செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு பிறகு எந்தக் கடமையிலும் ஈடுபடாதவர்களுக்கு அந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முப்படை தளபதிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை” எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.