;
Athirady Tamil News

அநுரவினால் வழங்கப்பட்ட நியமனங்கள் குறித்து முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

0

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்ற பின்னர் வழங்கப்பட்ட அனைத்து நியமனங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா (Ajith Perera) தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் வேலைத்திட்டம்
இந்த நிலையில் நியமனங்கள் வழங்கப்பட்டவர்களில் சிலர் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள் எனவும், நீதிமன்றங்களில் சிலரின் வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த பொதுத் தேர்தலின் போது, ​​தற்போதுள்ள நாற்பத்தி இரண்டு சதவீத வாக்குகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வேலைத்திட்டத்தில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைக்காமல் அநுர தரப்பு முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.