வானிலை முன்னறிவிப்புகளை குறித்து தெரிந்து கொள்ள TN Alert செயலி – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
வானிலை முன்னறிவிப்புகளை தெரிந்துகொள்ள செயலி உருவாக்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிற அமைச்சர்கள், துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையில் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில் முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கிய பங்கு வகிப்பதால் நாம் அரசு அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனி கவனம் செலுத்துகிறது.
TN Alert செயலி
குறிப்பாக வானிலை தகவல்களை உடனுக்குடன் வழங்க கடந்த 22.8.2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசர கால செயற்பாட்டு ,மையத்தை நான் திறந்து வைத்தேன். முன்னாள் இருந்த மையத்தை ஒப்பிடும் போது தற்போது பல்துறை வல்லுநர்கள் கொண்ட தொழில்நுட்ப குழுவுடன் இயங்கி வருகிறது. பல துறை வல்லுநர்கள் ஒருங்கிணைத்து செயல்படும் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது.
பெய்த மழையின் அளவு பெய்யும் போது தெரிந்தால் தான் நாம் அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பனிட்களை சரியாக செய்ய முடியும். அதற்காக 1400 தானியங்கி மழை மாணிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ் நேர தகவல்களை பெற்று வருகிறோம்.
இந்த தகவல் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கிடைத்தால் தங்களுக்கான திட்டமிடலை செய்ய வசதியாக இருக்கும். அதற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளோம். வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு ஆகிய தகவல்களை உடனுக்குடன் தமிழில் தெரிந்து கொள்ள தமிழக அரசு TN Alert செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
மழை காலங்களில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ மக்கள் தான் ஆள் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை குறித்த தகவல்களை நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மூலமாக கொண்டு சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.
நாட்டிற்கு முன்னுதாரணமாக, சென்னை மாநகராட்சியில் வார்டு, தெரு வாரியாக வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க சென்னை நிகழ் நேர வெல்ல முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதியோர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவதும் அவசியம்.
ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற வகையில் அரசு இயந்திரம் இயங்க வேண்டும். மழைக்கு முன்னதாகவே பணிகளை தொடங்க வேண்டும். மின்சாரம் போன்ற அத்தியாவசிய பணிகளில் பாதிப்பு ஏற்பட கூடாது. ” என பேசியுள்ளார்.