;
Athirady Tamil News

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000..அரசு வெளியிட்ட அறிவிப்பு-உடனே அப்ளை பண்ணுங்க!

0

பள்ளி மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழக அரசு
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கும் திட்டம் நடைபெற உள்ளது . இதற்க்கு மாணவ, மாணவியர்அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி 2024 – 2025 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

கடைசி நாள்

போட்டியாளர்கள் திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 30ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.