பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவோம்: சூளுரைக்கும் சுமந்திரன்
பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியாக தனித்து களமிறங்குவோம் என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தள்ளார்.
மன்னாரில் (Mannar) வைத்து இன்றையதினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.
தமிழரசு கட்சி
மேலும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பை விடுத்திருந்தோம்.
அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழர்சு கட்சியாகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம் அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் நாங்கள் நியமித்த நியமன குழு கூடி தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர் வரும் தேர்தலில் இளைஞர்கள்,யுவதிகள்,ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.