ஐரோப்பியர்களுக்கு மட்டும் புகலிடம்: சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை
ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் இனி புகலிடம் வழங்கினால் போதும் என சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை செய்துள்ளது.
ஐரோப்பியர்கள் மட்டும் போதும்
இனி ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் புகலிடம் வழங்கினால் போதும் என சுவிஸ் மக்கள் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
நாமே ஒரு சிறிய நாடுதான். ஆக, உலகம் முழுவதிலுமுள்ளவர்களை நம் நாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்கிறார் சுவிஸ் மக்கள் கட்சி தலைவரான Marcel Dettling.
அத்துடன், புகலிடம் வழங்குவதற்கான வரைமுறைகளையும் மாற்றவேண்டும் என்கிறார் அவர்.
அவரது கருத்தை சில வலதுசாரிக் கட்சிகள் வரவேற்றுள்ளன.
அதே நேரத்தில், இது மொத்தமாக புகலிடம் கோரும் உரிமையையே ஒழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படுவது போல உள்ளது, அது மனிதத்தன்மையற்ற செயலாகும் என இடதுசாரிக் கட்சியான Social Democrats கட்சி விமர்சித்துள்ளது.