;
Athirady Tamil News

ஏற்கனவே பதற்றம் நிலவும் ஜேர்மனியில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள புலம்பெயர்ந்தோர்

0

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் சிலர் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே பதற்றம் நிலவும் நிலையில், மீண்டும் புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் நடத்திய தாக்குதல்களால் பதற்றம்
ஜேர்மனியிலுள்ள Solingen நகரில், உள்ளூர் விழா ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் காயமடைந்தார்கள். தாக்குதல் நடத்தியவர் சிரியா நாட்டவர்.

அத்துடன், ஜூன் மாதத்தில், ஆப்கன் நாட்டவர் ஒருவர், ஜேர்மன் பொலிசார் ஒருவரைக் கத்தியால் குத்தியதில் அந்த பொலிசார் உயிரிழந்தார்.

இந்த விடயங்கள், ஜேர்மனியில் அரசியலிலும், மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்தோர் மீது எதிர்ப்பு மன நிலையை உருவாக்கியுள்ளன.

மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள புலம்பெயர்ந்தோர்
இந்நிலையில், புலம்பெயர்ந்தோர் ஒருவர் மீண்டும் பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளார்.

ஆம், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.10 மணியளவில், ஜேர்மனியின் Essen நகரில், வீடொன்றில் தீப்பற்றியது. அதில் 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளார்கள், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சிறிது நேரத்துக்குப் பின் மற்றொரு வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. அதில் 19 பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் 11 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சிறிது நேரத்துக்குள், Katernberg நகரில், வேன் ஒன்றைக்கொண்டு,ஒருவர் இரண்டு கடைகள் மீது மோதியுள்ளார்.

கையில் கத்தியும் பட்டாக்கத்தியும் வைத்திருந்த அந்த வேனின் சாரதியை, கம்பு, தடிகள் மற்றும் மண் வெட்டிகள் உதவியுடன் மடக்கிப் பிடித்துள்ளார்கள் ஆந்த பகுதியிலிருந்த மக்கள்.

பின்னர் பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

அவர், ஒரு புலம்பெயர்ந்தோர். 41 வயதான அவர் சிரியா நாட்டவர்.

தீவைப்பு சம்பவங்கள், வேன் கொண்டு தாக்குதல் ஆகிய அனைத்து குற்றச்செயல்கள்களுக்கும் காரணமான அந்த நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.