நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 192 பேர் மரணம்: 322 வீடுகள், 16 பாலங்கள் சேதம்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192 ஐ தொட்டுள்ளது.
192 பேர் உயிரிழப்பு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேபாளம் 54 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 192 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 30 பேர் வரை காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரிஷிராம் போகரேல் வழங்கிய தகவலில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 94 பேர் காயமடைந்து உள்ளனர், நேபாள இராணும் இதுவரை 162 மக்களின் ஹெலிகாப்டர்கள் உதவி கொண்டு மீட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒட்டுமொத்தமாக 4000 பேரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இருந்து நேபாளம் இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சேதமடைந்த வீடுகள் மற்றும் பாலங்கள்
கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் இதுவரை 322 வீடுகள் சேதமடைந்துள்ளது, இதனுடன் 16 பாலங்களும் சேதமடைந்துள்ளன.
நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.