குற்றமே செய்யாத இளைஞர்கள் – சிறை தண்டனை..தவறுக்கு நிவாரணமாக வெறும் 500 ரூபாய்!
குற்றமே செய்யாத இரண்டு இளைஞர்கள் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டு இளைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் இறுதியில், புகார் அளித்த பெண் பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக தெரியவந்தது.இதை தொடர்ந்து, பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து,
சிறை தண்டனை..
அந்த ரூபாயை இரு இளைஞர்களுக்கும் தலா 500 ரூபாய் என பிரித்து வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொய்யான பாலியல் புகாரை சரியாக கையாளாமல் முறையான விசாரணையை செய்ய தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்த இரண்டு இளைஞர்களுக்கு வெறும் 500 ரூபாய் மட்டும் நிவாரணமாக வழங்கப்பட்டதா என கேள்வி எழுந்து வருகிறது.
இளைஞர்கள் தரப்பில் இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் இளைஞர்களுக்கு ஆதரவு அளித்து, நிவாரண பொருள் சேர்த்துக் கொடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.