அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்; 2வது யார்? வெளியான சீனியாரிட்டி பட்டியல்
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சீனியாரிட்டி பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
6 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டது. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் தற்போது தமிழக அரசு அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சேர்த்து அமைச்சரவையில் மொத்தம் 35 அமைச்சர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் அமைச்சரவையில் முதல் இடத்தில் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2வது இடத்தில் உள்ளார்.
துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3வது இடத்தில் உள்ளார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 4வது இடத்திலும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 5 வது இடத்திலும், வனத்துறை அமைச்சர் க. பொன்முடி 6 வது இடத்திலும் உள்ளார்.
செந்தில் பாலாஜி
பொதுப் பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு 7 வது இடத்திலும், வேளாண்மை துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 8 வது இடத்திலும், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 9 வது இடத்திலும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 10 வது இடத்திலும் உள்ளார்.
புதிதாக பதவியேற்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் 19 வது இடத்திலும், மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 21 வது இடத்திலும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் 27வது இடத்திலும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் 29 வது இடத்திலும் உள்ளார். கடைசி இடமான 35 வது இடத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளார்.