வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம்
வடமாகாண ஆளுநர் செயலகத்தின பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் “அபயம்” எனும் பிரிவினருக்கு மக்கள் தங்கள் குறைகளை கூறி , அவர்களே அதனை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நடைமுறை இருந்தது.
தற்போது புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள நா.வேதநாயகன் , அபயம் பிரிவினை நிறுத்தி மக்கள் நேரடியாக தன்னிடம் முறையிட கூடியவாறான பொறிமுறையை உருவாக்கியுள்ளார்.
அதனால் ஊழல் மோசடிகள் துஸ்பிரயோகங்கள் , நிர்வாக ரீதியான பிரச்சனைகள் என்பவற்றை ஆளுநரிடம் நேரடியாக முறையிட முடியும்.