உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு
உயர் தரப் பரீட்சையின் மீள் கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2023/2024 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உரிய விண்ணப்பங்களை இன்று (01) முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் அனுப்ப முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்கள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.ugc.ac.lk) 2023/2024 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விண்ணப்பங்களுக்கான அழைப்பு தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பான மேலதிக விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023/2024 கல்வியாண்டுக்கான விண்ணப்பதாரர்களுக்கு பாடநெறிகளுக்கான முன்னுரிமை வரிசையை மாற்றுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட இரண்டு வார கால அவகாசம் இந்த சந்தர்ப்பத்திற்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.