போர் பதற்றம்… மத்திய தரைக்கடலுக்கு பிரம்மாண்ட கப்பலை அனுப்பும் பிரான்ஸ்
இஸ்ரேல் லெபனான் மோதல் காரணமாக மத்தியதரைக்கடல் பகுதியில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரம்மாண்ட கப்பல் ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
மத்திய தரைக்கடலுக்கு பிரம்மாண்ட கப்பலை அனுப்பும் பிரான்ஸ்
இஸ்ரேல் மற்றும் `லெபனானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கிடையே மோதல் காரணமாக மத்தியதரைக்கடல் பகுதியில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆகவே, லெபனானில் வாழும் வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்துவருவதற்காக பிரான்ஸ் ஹெலிகொப்டர்களை சுமந்து செல்லும் கப்பல் ஒன்றை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
லெபனானில் சுமார் 20,000 பிரான்ஸ் குடிமக்கள் வாழும் நிலையில், Dixmude என்னும் ஹெலிகொப்டர்களை சுமந்து செல்லும் கப்பலை பிரான்ஸ் நேற்று கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரான்ஸ் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.