60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த லொறி: பிரித்தானியாவின் M6 சாலையில் விபத்து
பிரித்தானியாவின் M6 நெடுஞ்சாலையில் லொறி ஒன்று 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாலை விபத்து
திங்களன்று மாலை, வாரிங்டன்(Warrington) அருகே உள்ள M6 நெடுஞ்சாலையில் லொறி ஒன்று 60 மீட்டர் உயரத்தில் இருந்து தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தடுமாறி விழுந்த வாகனம் கீழே உள்ள ஒரு மண் மேட்டில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
இந்த விபத்தானது, 20 மற்றும் 21 சந்திப்புக்களுக்கு இடையே மாலை 6:50 மணிக்கு நடந்துள்ளது.
லொறி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டார்.
ஓட்டுநருக்கு காயங்கள் ஏற்பட்டு இருப்பினும் அவை உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று நம்பப்படுகிறது.
விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்
Cheshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, லொறியை நீரைக் கொண்டு குளிர்வித்ததோடு, சுமார் 1,000 லிட்டர் எரிபொருள் கசிவை தடுத்து நிறுத்தியது.
விபத்து காரணமாக நெடுஞ்சாலையின் மூன்று வடக்கு நோக்கிய வழிப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் இந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.