இந்த பாடலை பகிர்ந்தால் குடியுரிமை ரத்து செய்யப்படும்: ஜேர்மனி அறிவிப்பு
ஒரு குறிப்பிட்ட பாடலை பகிர்வோரின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என ஜேர்மனி அறிவித்துள்ளது.
ஜேர்மனியின் அறிவிப்பு
யாராவது, ‘From the river to the sea, Palestine will be free’ என்னும் பாடலைப் பகிர்ந்தாலோ, லைக் செய்தாலோ, கமெண்ட் செய்தாலோ அவர்களுடைய குடியுரிமை ரத்து செய்யப்படும் என ஜேர்மனி அறிவித்துள்ளது.
அந்தப் பாடல், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பாடலாகும். ஆகவே, அந்தப் பாடலை யாராவது பகிர்ந்தாலோ, லைக் செய்தாலோ, கமெண்ட் செய்தாலோ, அவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும் தகுதியை இழப்பார்கள் என்று ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் புதிய குடியுரிமைச் சட்டம், யூத வெறுப்பு மற்றும் இனவெறுப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘From the river to the sea, Palestine will be free’ என்னும் பாடல், இஸ்ரேலின் அழிவுக்கு அழைப்பு விடுக்கிறது.
ஆகவேதான் அந்தப் பாடலை யாராவது பகிர்ந்தாலோ, லைக் செய்தாலோ, கமெண்ட் செய்தாலோ, அவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை மறுக்கப்படும் என ஜேர்மனி தெரிவித்துள்ளது.