ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தது எப்படி? இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு பெய்ரூட் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த தாக்குதலில், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகளின் முதன்மை தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலில் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உடன் முக்கிய சில தளபதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் ஊடகம் வெளியிட்ட முக்கிய தகவல்
இந்நிலையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் ரகசிய பதுங்கு குழியில் மறைந்து இருந்த போது நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்டுள்ள தகவலில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பதுங்கி இருந்த மறைவிடத்தின் மீது இஸ்ரேல் 80 டன் வெடிகுண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பதுங்கு குழியில் நச்சுப் புகை கசிவு ஏற்பட்டு 64 வயதான ஹசன் நஸ்ரல்லாஹ் மூச்சுத் திணறி வேதனையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
ஹசன் நஸ்ரல்லாஹ் உடல் குறிப்பிட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போது உடலில் காயங்கள் ஏதுமின்றி காணப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழப்பு உண்மையில் என்ன காரணம் என்பது குறித்து லெபானின் போராளி குழுவான ஹிஸ்புல்லா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.