;
Athirady Tamil News

இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய்

0

இளவரசர் வில்லியமுக்கு சொத்து ஒன்றிலிருந்து கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய் குறித்து பருவநிலை ஆர்வலர்கள் சிலர் அவரை விமர்சித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இளவரசர் வில்லியமுக்கு கிடைக்கும் 800,000 பவுண்டுகள் ரகசிய வருவாய் சார்லஸ் மன்னரானதும், அவரிடமிருந்து இளவரசர் வில்லியமுக்கு சொத்து ஒன்று கைமாறியது.

அது, Duchy of Cornwall என அழைக்கப்படும் ஒரு எஸ்டேட் ஆகும். அந்த எஸ்டேட் வில்லியமுக்கு பெரும் வருவாயை அளித்துவரும் நிலையில், அங்கு மிகப்பெரிய கார்கள் ஷோரூம் காம்ப்ளக்ஸ் ஒன்றும் உள்ளதாம்.

அதிலிருந்தும் இளவரசர் வில்லியமுக்கு ஆண்டொன்றிற்கு வாடகையாக 800,000 பவுண்டுகள் கிடைக்கிறதாம்.

ஆக, பருவநிலை தொடர்பான Earthshot Prize என்னும் விருதுகள் வழங்கும் நபரான வில்லியமுக்கு, இப்படி ஒரு கார்கள் ஷோரூமிலிருந்து வருவாய் வருவது அவரது பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாக பருவநிலை ஆர்வலர்கள் சிலர் அவரை விமர்சித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.