;
Athirady Tamil News

அழகிய இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகை: பார்வையாளர்களுக்கு அனுமதி

0

லண்டன், ஆவிகள் உலவும் மாளிகைகளுக்கு பெயர் பெற்ற இடம் என்பதில் சந்தேகமில்லைதான்.

இருப்பினும், எசெக்ஸிலுள்ள ஒரு மாளிகை ஆவி உலவும் மாளிகை என கருதப்படும் நிலையிலும், அதைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் செய்தியின் ஹைலைட்!

அழகிய இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகை
Hedingham Castle என்னும் அந்த 12ஆம் நூற்றாண்டு கால மாளிகை, Castle Hedingham என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

18ஆம் நூற்றாண்டில், Polly Miles என்னும் அழகிய இளம்பெண்ணொருத்தி அந்த பகுதியில் வாழ்ந்துவந்தாள். ஆனால், அவள் ஒரு சூனியக்காரி என மக்கள் கருதினார்கள்.

அவளுக்கு ஒரு ரகசிய காதலன் இருப்பதாக மக்கள் கூறிவந்த நிலையில், ஒரு குளிர்கால இரவில், அந்த மாளிகையில் ஒரு விருந்து நடைபெற்றுள்ளது.

திடீரென விருந்திலிருந்து மறைந்துபோன Pollyயை அதற்குப் பின் காணவேயில்லை. அதைத் தொடர்ந்து வந்த இளவேனிற்காலத்தில், அவளது உயிரற்ற உடல் அந்த மாளிகையின் அருகிலுள்ள ஒரு ஓடையில் மிதந்துவருவதை மக்கள் கண்டார்கள்.

அவளுடைய ரகசிய காதலனுடன் அவள் சண்டையிட்டதாகவும், அவன் அவளை தண்ணீரில் தள்ளிவிட்டதாகவும் சிலரும், அவள் தண்ணீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக சிலரும் கூறியுள்ளார்கள்.

அதற்குப் பிறகு அந்த மாளிகைக்குச் செல்லும்போதெல்லாம், அதன் உச்சியில் கருமையான ஒரு நிழலைப் பார்த்ததாக பலர் கூற, அது Pollyயின் ஆவிதான் என மக்கள் முடிவு செய்தார்கள்.

அதன் பிறகு, அவள் புதைக்கப்பட்ட இடத்தில், ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் ஹாலோவீன் பண்டிகையின்போதும் மர்மமான முறையில் பூக்கள் தோன்றுவதாக கூறப்படுகிறது.

விடயம் என்னவென்றால், தற்போது அந்த மாளிகையில் திருமணம், விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 20ஆம் திகதிவரை, அந்த மாளிகையைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்டணமும் உண்டு!

You might also like

Leave A Reply

Your email address will not be published.