;
Athirady Tamil News

பொதுத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்த சுயேட்சை குழுக்கள்

0

திர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 37 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது, செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் ஒக்டொபர் 01 தங்கள் கட்டுப்பணத்தை செலுத்திய குழுக்களினது ஆகும்.

இதன் படி, மட்டக்களப்பு (7), யாழ்ப்பாணம் (04), திகாமடுல்ல (4) மற்றும் திருகோணமலை (3) என்பன அதிகளவு கட்டுப்பணங்களை செலுத்தியுள்ள மாவட்டங்களாகும்.

வர்த்தமானி அறிவிப்பு
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடனான வர்த்தமானி செப்டம்பர் 25 ஆம் திகதி வெளியானது.

அதன் போது, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மேலும், ஒக்டோபர் 04 திகதி முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.