ஈரான், இஸ்ரேலுக்கு பயணங்களைத் தவிர்க்கவும்., இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே ஏவுகணை தாக்குதல் நடந்துவரும் நிலையில், அந்நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அந்த நாட்டில் உள்ள இந்திய குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உதவிக்கு தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமையையும், பாதுகாப்பு நிலைமையின் தீவிரத்தையும் இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ஈரானுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகமும் அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
“இந்திய குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும், வெளியே செல்லாமல் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்க வேண்டும்.” என கோரியுள்ளது.
Travel advisory for Indian nationals regarding Iran:https://t.co/FhUhy3fA5k pic.twitter.com/tPFJXl6tQy
— Randhir Jaiswal (@MEAIndia) October 2, 2024