கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான தொற்றுடன் பயணி… மூடப்பட்ட பிரதான ஜேர்மன் ரயில் நிலையம்
கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஐரோப்பா நாடுகளிலும்
வேகமாக பரவும் ஆபத்து கொண்ட எபோலா போன்ற தொற்றுநோய் தற்போது ஐரோப்பா நாடுகளிலும் வியாபிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் 7 மறும் 8 பாதைகளை மூடியுள்ளனர். அத்துடன் அவசர சேவை ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டுள்ள தகவலில், கண்கணில் ரத்தம் கசியும் ஆபத்தான வைரஸ் பாதிப்புடன் இரு பயணிகள் ரயிலில் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அதில் ஒரு பயணி 26 வயது ஜேர்மன் மருத்துவ மாணவர்.
இவர் தமது காதலியுடன் புதன்கிழமை பிற்பகல் பிராங்பேர்ட்டில் இருந்து ICE ரயிலில் ஹாம்பர்க் நோக்கி பயணப்பட்டுள்ளார். பயணத்தின் இடையே, இருவரும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் அவதிப்பட்டுள்ளனர்.
முன்னதாக அந்த மாணவர் ருவாண்டாவில் இருந்து நேரடியாக விமானத்தில் வந்தடைந்தார். அங்கே அவர் மார்பர்க் வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
300 பேர்கள் கண்காணிப்பில்
ஏற்கனவே ஆபத்தான மார்பர்க் வைரஸ் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட 10 பேர்களில் 9 பேர்கள் வரையில் இறக்க வாய்ப்புள்ள கொடிய நோயாகும் இது.
தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை உறுதி செய்யப்பட்ட தொற்று நோய்களில் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் மார்பர்க் வைரஸ். ருவாண்டாவில் மட்டும் 10 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
மார்பர்க் வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என 300 பேர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மார்பர்க் வைரஸ் திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் கடுமையான உடல்நலக்குறைவுடன் தொடங்குகிறது.
கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி பொதுவாக மூன்றாவது நாளில் ஏற்படலாம்.
வயிற்றுப்போக்கு ஒரு வாரம் தொடரலாம். மார்பர்க் வைரஸ் பாதிப்புக்கு தற்போது தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.