;
Athirady Tamil News

மத்திய கிழக்கில் இறுகும் போர் நெருக்கடி… எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ராடாமஸ்

0

இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய கிழக்கில் பயங்கர போர் வெடிக்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்படுத்த இருக்கும் அச்சுறுத்தல்

பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் இதுவரை கணித்துள்ள பெரும்பாலான சம்பவங்கள் நிறைவேறியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் வெடிக்கும் அபாயம் குறித்து அவர் கணித்துள்ளது அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய ராணியாரின் மறைவு, கோவிட் பெருந்தொற்று என பல்வேறு கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளது இதுவரை நிறைவேறியுள்ளது. தற்போது 2023 தொடக்கத்தில், இஸ்ரேலுக்கு ஈரான் ஏற்படுத்த இருக்கும் அச்சுறுத்தல் குறித்தும் தமது கணிப்பை வெளியிட்டிருந்தார்.

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் நெருக்கடி வாழும் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்டுள்ள கணிப்பை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்,

அதற்கு பழிவாங்கும் நோக்கில் ஏப்ரல் 13ம் திகதி இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை தாக்குதல் என தமது கணிப்பில் ஒருபகுதி நிறைவேறியுள்ளதாக வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

பேராபத்து தவிர்க்கப்படலாம்

மேலும், மத்திய கிழக்கில் மிக மோசமான சம்பவங்கள் நடக்க இருப்பதாகவே வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கிறார். இஸ்ரேலில் நிலைமை தற்போது பதட்டமாகவும் சிக்கலானதாகவும் உள்ளது.

வன்முறை மற்றும் மோதல்களின் சுழற்சியால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள், வரலாற்று, அரசியல் மற்றும் மதப் பிரச்சினைகளில் ஆழமாக வேரூன்றி உள்ளது என்றும் இஸ்ரேல் குறித்து எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகளால் பேராபத்து தவிர்க்கப்படலாம் அல்லது, மூன்றாம் உலகப் போருக்கான ஆயத்தமாக மத்திய கிழக்கு மாறலாம் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரித்துள்ளார்.

தலைவர்கள் உளவியல் ஆலோசனைகள் பெற்று முறையாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.