பொதுத் தேர்தலில் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலேயே இவ்வாறு சிலிண்டர் சின்னத்தில் குறித்த கட்சிகள் போட்டியிட உள்ளன.
புதிய ஜனநாயக முன்னணியின் (New Democratic Front) கீழ் இந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து இறுதித் தீர்மானத்தை எட்டும் நோக்கில் நேற்று கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது சிலிண்டர் சின்னத்தில் கட்சிகள் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் 34 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 58 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.