தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்துச் சென்ற வட மாநில இளைஞர்கள் – என்ன நடந்தது?
தண்டவாளத்தில் பாறாங்கற்களை தூக்கிப் போட்டுச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரீல்ஸ் மோகம்
தென்காசி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டவர்கள்
இந்நிலையில், சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை கடந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது பாம்புகோவில் சந்தை ரயில் நிலையத்தை அடுத்த சங்கனாபேரி பகுதியில் தண்டவாளத்தில் மர்மப் பொருள் இருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக சுதாரித்துக் கொண்டார். உடனே, ரயில் ஓட்டுநர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இளைஞர்கள் கைது
இதனையடுத்து, ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், சந்தேகத்தின் பேரில் கல் குவாரிக்குச் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்களை அழைத்து விசாரித்தனர்.
ரயில் நிலையம்
அதில், ஜகடல்பூரைச் சேர்ந்த ஃபல்சிங் பேகல் (21), மற்றொருவர் சத்தீஸ்கர் மாநிலம், மட்னார் நகரைச் சேர்ந்த ஈஸ்வர் மேடியா (23) என்பது தெரியவந்தது. இருவரும் தண்டவாளத்தில் பாறாங்கல்லை தூக்கி வைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
தண்டவாளத்தின் நடுவே பாறாங்கல்லை தூக்கி வைத்து ரீல்ஸ் எடுத்துவிட்டு அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.