;
Athirady Tamil News

மாவடிப்பள்ளியில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களுக்க்கு காசோலை வழங்கி வைப்பு

0
video link:

மாவடிப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகளில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சுய தொழில் புரிகின்ற குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப் பட்டது.

மாவடிப்பள்ளி மொழி அபிவிருத்தி மற்றும் சக வாழ்வு சங்கத்தினர் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க 16 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக காசோலை மாவடிப்பள்ளி கிழக்கு கிராம உத்தயோகத்தர் காரியலத்தில் புதன்கிழமை (02) மாலை வழங்கி வைக்கப்பட்டது .

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான அம்பாறை மாவட்ட வலையமைப்பு நிறுவனமான பெண்கள் வலையமைப்பானது சமுக,சக வாழ்வு நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இவ் உதவித்திட்டத்தினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாவடிப்பள்ளி மொழி அபிவிருத்தி மற்றும் சக வாழ்வு சங்கத்தின் தலைவர் இசட்.எம். நஸ்கான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் தலைவி டி.வாணி,விஷேட அதிதியாக எச்.டி.ஓ.நிறுவனத்தின் இணைப்பாளர் எம்.ஐ.ரியால்,கிராம உத்தியோகத்தர் ஏ.எம். அலியார்,மாவடிப்பள்ளி கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எச்.ஹினாயா,ஆர்.தன்சிலா,மாவடிப்பள்ளி மேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.சகீனா,அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எஸ்.அனிதா,சகவாழ்வு சங்க செயலாளர் ஏ.அஷ்ரப் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.