குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள ஓவியம்.! குடும்பத்தை பற்றிக்கொண்டிருந்த அதிர்ஷ்டம்
வீட்டை சுத்தம் செய்யும் போது தேவையற்ற பொருட்களை தூக்கி எறிகிறீர்களா? ஆனால் அவற்றை ஓரிரு முறை கவனமாகக் கவனியுங்கள்.
ஏனென்றால் அவற்றில் விலைமதிப்பற்ற பொருட்கள் இருக்கலாம். ஒரே இரவில் உங்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் விடயங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இத்தாலியில் நடந்த ஒரு சம்பவத்தின் விவரங்களை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.
1962-ஆம் ஆண்டில், ரோசோ (Luigi Lo Rosso) என்ற நபர் இத்தாலியின் கேப்ரியில் ஒரு வீட்டை வாங்கினார். அந்த வீட்டை சுத்தம் செய்யும் போது, ஒரு ஓவியத்தைக் கண்டார்.
ரோசோ அதை தனது வீட்டின் சுவரில் தொங்கவிட்டார். பின்னர் அவர்களின் குடும்பம் பாம்பிக்கு குடிபெயர்ந்தது.
ஆனால் வீட்டை காலி செய்யும் போது, ரோசோ அந்த ஓவியத்தை புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவரது மனைவி மறுத்துவிட்டார். இறுதியில் எப்படியோ அதனை பாம்பிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
அந்த ஓவியத்தை முழுமையாக ஆராய்ந்து பார்த்தால், அதன் மேல் இடது பக்கத்தில் பிக்காசோவின் பெயர் இருப்பது தெரியும். ஆனால், ரோசோவின் குடும்ப உறுப்பினர்களுக்கு அப்போது அது யார் என்று தெரியவில்லை. ரோஸோ அந்த ஓவியத்தை தனது அறை ஒன்றில் வைத்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, ரோசோவின் மகன் ஆண்ட்ரியா (Andrea), கலை வரலாற்றுக் கலைக்களஞ்சியம் பயின்றார். வீட்டில் இருந்த அந்த ஓவியத்தைப் பற்றி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
அப்போது தான், இந்த ஓவியத்தின் பின்னணியில் உள்ள கலைஞர் யார் என்பதைக் கண்டறிய ஆய்வு தொடங்கப்பட்டது.
ஆண்ட்ரியா தனது தந்தை ரோசோவின் மரணத்திற்குப் பிறகும் தனது ஆராய்ச்சியை கைவிடவில்லை.
ரூ.200 கோடி
இறுதியில் பிரபல கலை துப்பறியும் நிபுணர் மௌரிசியோ செராசினி (Maurizio Seracini) நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை நாடினார்.
ஆர்காடியா அறக்கட்டளையின் வரைகலை நிபுணரும் அறிவியல் குழுவின் உறுப்பினருமான சிங்கியா அல்டீரி, பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, இந்த ஓவியம் ஒரு பிரபலமான பிக்காசோ கலைப்பொருள் என்பதைக் கண்டுபிடித்தார்.
தற்போது இதன் மதிப்பு 5 மில்லியன் பவுண்டுகள் அதாவது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.200 கோடியாக உள்ளது.
தனது தாய்க்கு அது பிடிக்காததால் அந்த ஓவியத்தை கீழே போட விரும்புவதாக ஆண்ட்ரியா பல முறை கூறியுள்ளார்.
“இந்த ஓவியம் தற்போது ஒரு லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது, என்ன செய்வது என்பது குறித்து பிக்காசோ அறக்கட்டளையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று அவர் கூறினார். இதுபோன்று, அதிர்ஷ்டம் இரவோடு இரவாக அவர்களின் கதவைத் தட்டியுள்ளது.