;
Athirady Tamil News

முக்கிய வழக்கில் தொடர்புடைய நபர்: 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரிய ஜேர்மன் சட்டத்தரணிகள்

0

பிரித்தானிய சிறுமி ஒருத்தியைக் கடத்திக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டும் என ஜேர்மன் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மாயமான பிரித்தானிய சிறுமி
Leicestershireஐச் சேர்ந்த Kate மற்றும் Gerry McCann தம்பதியர், 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, தங்கள் குழந்தைகளான Madeleine McCann, இரட்டையர்களான Sean மற்றும் Amelieயுடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.

பிள்ளைகளை தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றிருந்தார்கள் பெற்றோர். அவர்கள் திரும்பி வந்தபோது, கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த Madeleine மாயமாகியிருந்தாள்.

Madeleine காணாமல் போய் 17 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவள் என்ன ஆனாள் என்பது இதுவரையிலும் தெரியவேயில்லை.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், 2020ஆம் ஆண்டு, Christian Brueckner (47) என்ற நபர் மீது பொலிசாரின் கவனம் திரும்பியது.

15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரிய சட்டத்தரணிகள்
இந்நிலையில், Madeleine மாயமான வழக்கில் Brueckner மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. அந்த வழக்கு தொடர்பாக தங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

இதற்கிடையில், ஏற்கனவே ஒரு பெண்மணி மற்றும் சிறுமியை வன்புணர்ந்தது, மற்றும் ஆபாசமாக நடந்துகொண்டது என சில வழக்குகளில் சிக்கினார் Brueckner.

தற்போது, அந்த வழக்குகளில் அவருக்கு முறையே 13 மற்றும் 2 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என அரசு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்கள். வரும் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.