;
Athirady Tamil News

இஸ்ரேலின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்த ஜோ பைடன்… தாறுமாறாக உயர்ந்த எண்ணெய் விலை

0

ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நிர்வாகத்தின் அடுத்த நகர்வு இதுவாக இருக்கலாம் என விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்ட நிலையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக

ஈரானின் எதிர்பாராத ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அந்த நாட்டின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விவாதித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதை அடுத்து எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், வியாழக்கிமைக்கு முன்பு ஈரான் மீது தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை எனறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்கிறாதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஜோ பைடன், அது குறித்து விவாதித்து வருவதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பைடனின் கருத்துகளைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் சூழல் அதிகரித்து வருவதால், எண்ணெய் விலைகள் சுமார் ஐந்து சதவீதம் உயர்ந்தன. இந்த நிலையில், லெபனானில் இருந்து பிரித்தானியர்கள் இன்றே வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கம் தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது.

முதன்மையான முன்னுரிமை

மேலும், குறைந்த எண்ணிக்கையிலான விமான சேவைகளை பிரித்தானிய அரசாங்கம் லெபனானில் இருந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும், வியாழக்கிழமை அதிக எண்ணிக்கையிலான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவிக்கையில், லெபனானில் சூழ்நிலை மோசமடைந்து வருவதாகவும், லெபனானில் உள்ள பிரித்தானிய பிரஜைகளின் பாதுகாப்பு எங்களின் முதன்மையான முன்னுரிமையாக தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு மேலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. லெபனானின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், மத்திய பெய்ரூட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்த வான்வழி தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயங்களுடன் தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா படைகளுடன் லெபனான் ராணுவமும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.