;
Athirady Tamil News

சூடுபிடிக்கும் அரிசிச் சண்டை… போட்டியில் இரண்டு ஆசிய நாடுகள்

0

இந்தியாவும் பாகிஸ்தானும் விலை வரம்புகளை நீக்கி அரிசி ஏற்றுமதியை போட்டி போட்டுக்கொண்டு மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு அரிசி வகைகளின் விலை சரிவடைந்துள்ளது.

அனைத்து அரிசி வகைகளுக்கும்

வெளிநாடுகளுக்கான விற்பனையைத் தடுக்கும் நோக்கில் ஓராண்டுக்கும் மேலாக அமுலில் இருந்த பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்திய அரசாங்கம் சனிக்கிழமையன்று நீக்கியது.

உண்மையில் பாகிஸ்தான் நிர்வாகம் அனைத்து அரிசி வகைகளுக்கும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) திரும்பப் பெறுவதாக ஒரு நாள் முன்னதாக அறிவித்திருந்தது.

பாஸ்மதி அரிசிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,300 டொலர் என்றும், பாஸ்மதி அல்லாத அரிசிக்கு 550 டொலர் என்றும் 2023 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் செப்டம்பர் முதல் பாஸ்மதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 950 டொலர் என இந்தியா அறிவித்த நிலையிலேயே பாகிஸ்தான் அந்த முடிவுக்கு வந்தது.

உலகில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே பாஸ்மதி அரிசியை உற்பத்தி செய்து வருகின்றனர். 2023 ஆகஸ்டு முதல் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்யும் ஒரே நாடாக பாகிஸ்தான் மாறியது.

அத்துடன் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை பாகிஸ்தான் முடிவு செய்தது. இதனையடுத்தே இந்தியா அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது. மேலும் பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை பாகிஸ்தான் முடிவு செய்து வந்ததால்,

5 பில்லியன் டொலர் வருவாய்

அந்த நாட்டின் அரிசி ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 5 பில்லியன் டொலர் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது என பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி, ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தும் பாகிஸ்தான் அரசின் முடிவு பல அரிசி உற்பத்தியாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது, உலக அரிசி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை இந்தியா தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

பாஸ்மதி ஏற்றுமதியில் 65 சதவீதம் இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாமுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய அரிசி ஏற்றுமதியாளராக பாகிஸ்தான் உள்ளது.

பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் 35 சதவீதம் பாகிஸ்தான் முன்னெடுக்கிறது. 2022-23 நிதியாண்டில், அரிசி விற்பனை மூலம் இந்தியா 11 பில்லியன் டொலர் ஈட்டியுள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதியால் மட்டும் 4.7 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.